ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்: மைய கூட்டணி பின்னடைவு

ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் மைய வலதுசாரிகள் மற்றும் இடதுசாரி கூட்டணிகள் பெரும்பான்மையை இழந்திருப்பதோடு தாராளவாதிகள், பசுமைவாதிகள் மற்றும் தேசியவாதிகளுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.

மைய வலதுசாரி ஐரோப்பிய மக்கள் கட்சி தொடர்ந்து பெரிய கட்சியாக இருப்பதோடு ஐரோப்பிய ஆதரவு கூட்டணி ஒன்றை அது அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாராளவாதிகள் மற்றும் பசுமைவாதிகள் சிறந்த முடிவைப் பெற்றிருப்பதோடு இத்தாலி மற்றும் பிரான்ஸில் தேசியவாதிகள் வெற்றியீட்டியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தேர்தலில் பல தசாப்தங்களாக இடம்பெற்ற வீழ்ச்சியைத் தொடர்ந்து 20 ஆண்டுகளின் பின் அதிக வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.

28 உறுப்பு நாடுகளில் இடம்பெற்ற இந்தத் தேர்தலில் 51 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பணி ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சட்டங்களை இயற்றுவதாக அமையும். விகிதாசார முறையில் நடக்கும் தேர்தல் இது. விகிதாசாரத்திற்கு ஏற்ப கட்சிகளின் பிரதிநிதித்துவம் இருக்கும்.

751 தொகுதிகள் இருந்த பாராளுமன்றத்தில் மைய வலதுசாரி கட்சியான ஐரோப்பிய மக்கள் கட்சியிடம் 217 இடங்களும், மைய இடதுசாரி கட்சியான சோஷியலிஸ்ட்டுகள் மற்றும் டெமொக்ரேட்டுகளிடம் 186 இடங்களும் இருந்தன.

இதில் பிரிட்டனில் புதிதாக உருவாக்கப்பட்ட பிரெக்சிட் கட்சி வெற்றியை அறிவித்துள்ளது. கன்சர்வேடிவ் மற்றும் தொழில் கட்சிகள் இந்தத் தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்திருப்பதோடு லிபரல் டெமொக்ரெட்ஸ் முன்னெற்றம் கண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து மார்ச் 29ஆம் திகதி பிரிட்டன் விலகியிருக்கவேண்டும். ஆனால், விலகுவது தொடர்பான ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்காத காரணத்தால், இந்த தேர்தலில் பிரிட்டனும் பங்கேற்கும் சூழ்நிலை உருவானது.

Tue, 05/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை