சர்வதேச பயங்கரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம

சர்வதேச பயங்கரவாதத்தை தலை தூக்க நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்பதுடன், எதிர்காலத்தில் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து உபாய மார்க்கங்களையும் தற்போதே வகுத்துவிட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இராணுவ வீரர்களுக்குத் தண்டனை வழங்கியமை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

யுத்தத்தின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு ஆசி வேண்டி நேற்று முன்தினம் இரவு கொழும்பு,

நாரஹெண்பிட்டி அபேராம விகாரையில் விசேட மத வழிபாடுகள் நடத்தப்பட்டன. இவ்வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூன்று தசாப்தகால யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சர்வதேச பயங்கரவாதத்துக்கு முகங்கொடுத்துள்ளோம். அரசாங்கத்தின் பிற்போக்கான நடவடிக்கைகள் காரணமாகதான் சர்வதேச பயங்கரவாதம் எமது நாட்டில் தலை தூக்கியுள்ளது.

இராணுவத்தினரை சிறையில் அடைத்தமை, இராணுவத்தினருக்கு தண்டனை வழக்கியமை, புலனாய்வாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டமை, பயங்கரவாத ஒழிப்பை தளர்த்தும் புதிய சட்டங்கள் கொண்டுவருகின்றமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் இன்று இந்நிலைக்கு முகங்கொடுத்துள்ளோம்.

 

Tue, 05/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை