மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் சபாநாயகராக பதவிப்பிரமாணம்

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் அந்நாட்டு சபாநாயகராக இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

இதற்கான அறிவிப்பை ஆளும் கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சி உத்தியேகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாலைதீவின் பாராளுமன்ற தேர்தலில் மாலைதீவு ஜனநாயக கட்சி 87 உறுப்பினர் தொகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இக்கட்சி  முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை சபாநாயகராக தெரிவுசெய்ய ஏகோபித்த முடிவை எட்டியுள்ளதாக அக்கட்சி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tue, 05/28/2019 - 13:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை