தமிழகத்தில் தோல்வியடைந்த பா.ஜ.க பிரபலங்கள்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் தேர்தலை சந்தித்த பா.ஜனதா கட்சி 350 தொகுதிகளில் வென்றது. ஆனால் மோடியின் அலை தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனை தி.மு.க நிறுத்திவிட்டது.

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜனதா 5 இடங்களை கேட்டுப்பெற்று போட்டியிட்டது. இந்தியா முழுவதும் பா.ஜனதா வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. தமிழகத்தில் பெரும் கூட்டணியை அமைத்தும் வெற்றியை தனதாக்க முடியவில்லை என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட

5 வேட்பாளர்களுமே தோல்வியை தழுவினர்.

பா.ஜனதா வெற்றிக்கு சாதகமான தொகுதியான கோவையிலும் தோல்விதான் கிடைத்தது. கோவை அதிமுகவின் கோட்டையாக விளங்கினாலும் பா.ஜனதாவிற்கு கைக்கொடுக்கவில்லை.

பா.ஜனதா வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள்.

கோயம்புத்தூர்

வெற்றி வாக்கு வித்தியாசம்:- 200,000- த்திற்கும் அதிகம்

பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) வாக்குகள்:- 571,150

சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக) வாக்குகள்:- 392,007

சிவகங்கை

வெற்றி வாக்கு வித்தியாசம்:- 330,000--த்திற்கும் அதிகம்

கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) வாக்குகள்:- 566,104

எச்.ராஜா (பாஜக) வாக்குகள்:- 233,860

ராமநாதபுரம்

வெற்றி வாக்கு வித்தியாசம்:- 127,000-த்திற்கும் அதிகம்

நவாஸ் கனி (இ.யூ.மு.லீக்) வாக்குகள்:- 469,943

நயினார் நாகேந்திரன் (பாஜக) வாக்குகள்:- 342,821

கன்னியாகுமரி

வெற்றி வாக்கு வித்தியாசம்:- 260,000-த்திற்கும் அதிகம்

ஹெச். வசந்தகுமார் (காங்கிரஸ்) வாக்குகள்:- 627,235

பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக) வாக்குகள்:- 367,302

தூத்துக்குடி

வெற்றி வாக்கு வித்தியாசம்:-340,000-த்திற்கும் அதிகம்

கனிமொழி கருணாநிதி (திமுக) வாக்குகள்:- 563,143

தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) வாக்குகள்:- 215,934

Sat, 05/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை