சுருங்கிவரும் நிலவு

நிலவு படிப்படியாகச் சுருங்கி வருவதாய் ‘நேச்சர் ஜியோசயன்ஸ்’ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

நிலவின் மேற்பரப்பில் சுருக்கங்கள் காணப்படுகின்றன. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்ட படங்களை ஆய்வு செய்ததன் மூலம் அது அறியப்படுகிறது. நிலவின், வட முனைக்கு அருகில் உள்ள பகுதியில் எடுக்கப் பட்ட, 12 ஆயிரம் புகைப்படங்கள் இவ்வாறு ஆய்வு செய்யப்பட்டன

நிலவில் டெக்டானிக் தட்டுகள் இல்லை. ஆனால் அங்கு டெக்டானிக் செயல்பாடு உள்ளது.

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிலவு உருவானது. அன்று முதல் நிலவு வெப்பத்தை மெதுவாக இழந்துவருகிறது.

அதன் காரணமாக நிலவின் மேற்பரப்பு சுருங்கியுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்பநிலை குறைந்து வருவதால், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, 150 அடி, நிலவு சுருங்கி உள்ளது.

Thu, 05/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை