அம்புதாக்கிய நிலையில் ஜெர்மனியில் மேலும் இரு சடலங்கள் கண்டுபிடிப்பு

ஜெர்மனியின் பவேரியாவில் ஹோட்டல் அறை ஒன்றில் மூவர் அம்புதாக்கி கொல்லப்பட்டுக் கிடந்த மர்மம் விலகாத நிலையில், மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்த ஹொட்டலுக்கு 650 கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அந்த உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு பவேரிய ஹொட்டல் அறையில் இறந்து கிடந்த ஒரு பெண்ணுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹொட்டல் அறையில் இறந்து கிடந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், விட்டிஜன் என்னும் இடத்தில் அமைந்துள்ள அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இறந்து கிடந்த ஒரு பெண்ணின் சகோதரி என்றும் கூறப்படுகிறது.

பவேரிய ஹொட்டல் அறை மரணங்களை பொலிஸார் விசாரித்து வரும் நிலையில், நேற்று விட்டிஜன் அடுக்கு மாடி குடியிருப்பு மரணங்கள் தொடர்பான தகவல் கிடைத்தது.

அந்த குடியிருப்பின் தபால் பெட்டியில் கடிதங்களை யாரும் எடுக்காததால் அது நிரம்பி வழிந்ததைக் கண்டும், அந்த வீட்டிலிருந்து ஏதோ துர்நாற்றம் வீசியதையும் அறிந்த அக்கம் பக்கத்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்தும் அந்த வீட்டிலும் இருவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இறந்தவர்கள் இடையேயான உறவு முறைகளோ, அவர்கள் இறந்து எத்தனை நாட்கள் ஆயிற்று என்பதோ தெரியவில்லை. அம்புகள் மூலம் விலங்குகளை வேட்டையாடுவது கூட ஜெர்மனியில் தடை செய்யப்பட்டதாகும்.

அப்படியிருக்க எதற்காக அம்புகள் வாங்கப்பட்டன, யார் வாங்கினார்கள், கொலை செய்தது யார், ஏன் கொலை செய்தார்கள் என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை.

நேற்று உடற்கூறு பரிசோதனை முடிவுகள் வர இருந்த நிலையில் தொடர்ந்து பொலிஸார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

Wed, 05/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை