வர்த்தக ஒப்பந்தம் குறித்து சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வர்த்தக ஒப்பந்தத்தில் இப்போதே கையெழுத்திடவில்லை என்றால், 2020க்குப் பின்னர் நிலைமை மேலும் மோசமாகி விடும் என்று சீனாவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இதில் முடிவு எட்டப்படவில்லை. இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 2020ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் என்று சீனா எண்ணுவதாகக் கூறியுள்ளார்.

2020ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் சீனாவுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஜனநாயகக் கட்சி வெற்றி பெறும் என்று தெரிவித்த டிரம்ப், ஆனால் வெல்லப் போவது தாம் தான் என்றும் குறிப்பிட்டார்.

எனவே 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக தாம் பதவிக்கு வந்தால் சீனாவின் நிலைமை மேலும் மோசமாகி விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை