போனி சூறாவளி; இந்தியாவின் கிழக்கு கரையை கடந்துள்ளது

SUG

போனி சூறாவளி, இந்தியாவின் கிழக்குக் கரையை கடந்துள்ளதாக, அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மணித்தியாலத்திற்கு 200கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இந்தியாவின் கிழக்குக் கரையான ஒடிசாவில் அடை மழை பெய்து வருவதோடு,  பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு, கட்டிடங்களின் கூரைகளும் காற்றினால் அள்ளுண்டுள்ளன.

ஒடிசாவிலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களது வசிப்பிடங்களிலிருந்து வெளியேறி  பொதுவிடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். 

மேலும் போனி சூறாவளியானது, ஒடிசாவின் 15மாவட்டங்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஒடிசாவில் விமானம் மற்றும் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பாடசாலைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

எனினும், எந்தவித பாதிப்புகளும் இதுவiரியல் ஏற்படவில்லை எனவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Fri, 05/03/2019 - 12:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை