தோட்ட நிர்வாகங்கள் தேவையின்றி இராணுவத்தினரை அனுமதிக்கின்றனர்

வடிவேல் சுரேஸ் குற்றச்சாட்டு

தற்போதுநாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலமையை சாதகமாக பயன்படுத்தி தோட்ட நிர்வாகத்தினர் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப சிறிய பிரச்சனைகளுக்கும் தோட்ட நிர்வாக பிரச்சினைகளுக்கம்  தீர்வுகாண  இராணுவத்தினரை பெருந்தோட்டங்களுக்கு உள்வாங்கி சில மக்களை பயமுறுத்தி வருகின்றனர்.

 இனி இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் இருப்பதற்கும் மக்கள்  அச்சம் இன்றி வாழ்வதற்கும் உரியநடவடிக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனி தோட்டங்களுக்குள் இராணுவத்தினர் காரணம் இன்றி செல்ல அனுமதிக்கபட மாட்டாது என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

பதுளை, லெஜர்வத்த தோட்டத்தின் நிர்வாகத்தினர் தோட்ட பிரச்சினைக்கு பொலிஸ் மூலம் தீர்வு காணாமல் இராணுவத்தினர் அழைக்கபட்டது தொடர்பாக மக்கள் இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்ைகயிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தவிடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்தநாட்டில் அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் இவ்வேளையில் இராணுவத்தினர் எங்கும் செல்லலாம். அவரதுபணியைத் தொடரலாம். இருந்தும் திடீரென தோட்டங்களுக்கு சிறிய பிரச்சனைகளுக்கு எல்லாம் செல்வது ஏற்றுக் கொள்ளமுடியாது. இவ்வாறு செல்வதால் பொது மக்கள் அச்சம் அடைகின்றனர். பதுளை மாவட்ட  தோட்டங்களில் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு பலர்  முயற்சித்தபோதிலும் அதனை நான் தடுத்து நிறுத்தி இருக்கின்றேன். தற்போது இவ்வாறான செயற்பாடுகளினால் மீண்டும் அந்த நிலை ஏற்படாமல் நான் மிகவும் கவனமாக செயற்பட்டு வருகிறேன் என்றார்.

Tue, 05/28/2019 - 13:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை