பிரதமரின் எம்.பி. பதவிக்கு எதிரான மனு தள்ளுபடி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிளா கோணவல தாக்கல் செய்த குவோ வரண்டோ (quo warranto) மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வழக்கில் சாட்சியாக முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள்,  மூலப் பிரதிகளாக அல்லது உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளாக  தாக்கல் செய்யப்படவில்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகேஸ்வரன் தெரிவித்தார்.

எனவே, இம்மனுவை விசாரணை செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லைஎனவும், அதனை தள்ளுபடி செய்யுமாறும் மன்றில் அவர் கோரிக்கை விடுத்தார்.

அவரது ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதிகளான சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். 

குறித்த மனு, ஐ.ம.சு.கூட்டமைப்பின்  கொழும்பு மாநகர சபை உறுப்பினரும்  ‘பெண்களுக்கு நீதி’ எனும் அமைப்பின் இணைத் தலைவருமான ஷர்மிளா கோணவலவினால் தாக்கல் செய்யப்பட்டது.  

 

 

Tue, 05/21/2019 - 11:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை