பாதுகாப்புச் சபை சிரியா தொடர்பில் அவசர கூட்டம்

வடமேற்கு சிரியாவில் அதிகரித்து வரும் மோதல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா பாதுகாப்புச் சபையை அவசரமாகக் கூடும்படி பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் குவைட் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சிரியாவில் ஜிஹாதிக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப் பிராந்தியத்தின் மீது சிரியப் படையினர் மற்றும் அதன் நட்பு நாடான ரஷ்யா கடந்த ஏப்ரல் பிற்பகுதி தொடக்கம் தாக்குதல்களை அதிகரித்துள்ளது. இது முழு அளவிலான யுத்தத்திற்கு வித்திடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஏற்படும் முழு அளவிலான யுத்தம் பாரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தும் என்று பல நாடுகளும் கவலையை வெளியிட்டிருக்கும் நிலையில் இன்று பாதுகாப்புச் சபை மூடிய அறையில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிரந்த அங்கத்துவம் அல்லாது பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகளாக இருக்கும் பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் குவைட், தற்போது ஒன்பதாவது ஆண்டாக நீடிக்கும் சிரிய யுத்தத்தில் மனிதாபிமான பிரச்சினையை பற்றி பேச வலியுறுத்தியுள்ளன.

கடந்த ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து இடம்பெறும் குண்டுத் தாக்குதல்களில் 119 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருப்பதோடு இந்த வன்முறைகள் காரணமாக 180,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்திருப்பதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்ட நிலையில் ஆரம்பமான சிரிய உள்நாட்டு யுத்தத்தில் இதுவரை 370,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

Fri, 05/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை