பெரிய வெங்காயத்திற்கு இறக்குமதி வரி அதிகரிப்பு

உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், பெரிய வெங்காயத்திற்கு இறக்குமதி வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, விவசாய அமைச்சர் பி.ஹரிஸன் தெரிவித்தார்.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 20 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

உள்ளூர் விவசாயிகளின் நலன் கருதி குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

“அறுவடை செய்யும் வேளையிலேயே வழமையாக இறக்குமதி வரி அதிகரிக்கப்படும். ஆனால், இம்முறை பெரிய வெங்காய அறுவடைக் காலம் தொடங்க முன்னர், இறக்குமதி வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெரிய வெங்காய அறுவடைக்கு ஒரு மாத காலம் இருக்கின்றது. இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை 3 மாத காலத்திற்கு சேமித்து வைக்க முடியும் என்பதால், பெரிய வெங்காய இறக்குமதியை தடை செய்யும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக பெரிய வெங்காய செய்கையாளர்கள் சிறந்த விலைக்கு தங்களது அறுவடையை விற்பனை செய்ய முடியும்" எனவும், அவர் தெரிவித்தார்.

Tue, 05/21/2019 - 14:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை