பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் சஹன் விஜயரட்னவுக்கு விருது

ஒப்சேர்வர்- மொபிடெல்- சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை வென்ற முதலாவது பிரின்ஸ் ஒப் வெல்ஸ் கல்லூரியின் மாணவர் சஹன் விஜேரட்ன ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டில் இந்த விருதை வென்றார். மிலேனியம் ஆண்டான 2000 ஆம் ஆண்டில் கண்டி திரித்துவக் கல்லூரியின் கௌசல்ய வீரரத்ன விருதை வென்ற அதேநேரம் 2001 ஆம் ஆண்டு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் கௌசல் லொகு ஆராச்சி விருது வெற்றியின் 2002 இல் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் சஹன் விஜேரட்னவுக்கு விருது வெல்லும் வாய்ப்பு கிடைத்தது.

2002 இல் ஒப்சேர்வர் விருதை வென்ற போதும் இலங்கை இளைஞர் அணிக்கு அப்பால் சென்று போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு சஹானுக்கு கிடைக்கவில்லை.

பாடசாலை காலத்தில் சஹன் திறமையாக விளையாடியிருந்த நிலையில் 2002 இல் அவர் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இலங்கை அணிக்கு தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் அதற்கு அப்பால் சென்று இலங்கை ஏ அணியில் அவரால் இடம்பிடிக்க முடியாமற்போய்விட்டது.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தபோது அவர் இலங்கை தேசிய அணிக்காக விளையாடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அந்த வாய்ப்பு அவருக்கு தவறிப்போனது. ஒப்சேர்வர் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றவர்களில் இலங்கை அணிக்காக ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்காத ஒரே வீரர் சஹன் மட்டுமே என்று அவரது தந்தை ஒருமுறை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2001 மற்றும் 2002 ஆகிய வருடங்களில் சஹன் காட்டிய திறமையால் ஈர்க்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அவருடன் ஒப்பந்தமொன்றை செய்துகொண்டது எனினும் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமற்போனது அவரது துரதிஷ்டம் என்று தான் கூறவேண்டும்.

அந்த ஒப்பந்தத்தின் கீழ் அவர் இலங்கை ஏ அணிக்கு தெரிவானபோதும் கிரிக்கெட் தலைவர் அணியை மட்டுமே அவர் பிரதிநிதித்துவம் செய்ய முடிந்தது. அதற்கு அப்பால் செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. 2012 இல் வர்த்தக அணிகளுக்கிடையிலான ஏ பிரிவு சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற செலான் வங்கி அணியில் அவர் இடம்பெற்றிருந்தார்.

பாடசாலை காலத்தில் இவர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் 13,15,17 மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான தலைவராக அவர் இருந்து வந்தார். அத்துடன் 2002 இல் இங்கிலாந்தில் மிடில் செக்ஸ் லீக்கில் ஆறு மாத காலம் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதேநேரம் 2009 முதல் மூன்று வருடங்களுக்கு இங்கிலாந்தில் கவுன்டி (பிராந்திய) கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் அவருக்கு கிட்டியது.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் மாணவராக கிரிக்கெட் விளையாட்டில் 2002 ஆம் ஆண்டில் சஹன் விஜேரட்ன காட்டிய திறமை காரணமாக அவர் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரருக்கான விருதை வெற்றிபெற்றார். அத்துடன் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருதும் அதனை யடுத்து 2003 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் அவருக்கு 19 வயதுக்குட்பட்ட சிறந்த வீரர் என்ற விருதை அவருக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

1984 ஆகஸ்ட் 27 ஆம் திகதி மஹா மண்டிகே சஹன் ரங்கன விஜேரட்ன கொழும்பில் பிறந்தார். உள்ளூரில் சிலோ மரியன்ஸ், முவர்ஸ், என்.சீ. சீ ஆகிய கழகங்களுக்காக விளையாடிய சஹன் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 4 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் பெற்றார். அதில் நான்கு சதங்கள் அடங்கின. இந்நிலையில் ஒப்சேர்வர்- மொபிடெல் ஜனரஞ்சக பாடசாலை கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை போட்டிகள் இப்போது சூடு பிடித்துள்ளன.

இலங்கையின் மிகவும் பழைமையான தேசிய பத்திரிகையான சண்டே ஒப்சேர்வர் பத்திரிகையின் ஏற்பாட்டில் தேசிய நடமாடும் தொலைத் தொடர்பு வழங்குனரான மொபிடெல் இப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்குகிறது. 41 ஆவது தடவையாக நடைபெறும் இப்போட்டி நிகழ்ச்சியில் மொபிடெல் நிறுவனம் அனுசரணை வழங்கும் 12 ஆவது தடவை இதுவாகும்.

1978/79 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது ஒப்சேர்வர் சிறப்பு பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை வென்றவர். தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதான போட்டி தீர்ப்பாளரான ரஞ்சன் மடுகல்ல ஆவார். எமது 41 ஆவது விருது வழங்கல் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்பவர் ரஞ்சன் மடுகல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மொபிடெல் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி நளின் பெரேரா மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன ஆகியோரின் கீழ் ஒப்சேர்வர் விருது வழங்கல் விழாவுக்கு கிடைக்கும் பங்களிப்பு அளவிடற்கரியது.

இதேநேரம் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக பணிப்பாளருமான கிருஷாந்த குரே தனது நவீனமான யோசனைகள் மூலம் இப்போட்டிகளை புதிய பரிமாணத்துக்கு எடுத்துச் செல்ல தேவையான வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை