தானசாலைகளுக்கு மட்டுப்பாடு

SUG

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இம்முறை 92 தானசாலைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கியுள்ளதாக,  பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்தது.

கடந்த வருடத்தில் 6,000 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இம்முறை முதற்தடவையாக 92 தானசாலைகளை மாத்திரமே பதிவு செய்துள்ளதாகவும், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்த்து.

கடந்த வருடம் கொழும்பு நகரில் மாத்திரம் 150 தானசாலைகள் காணப்பட்டன. ஆனால், இம்முறை இங்கு 4 தானசாலைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இம்முறை வெசாக் வலயம், அலங்கார பந்தல்கள், மத அனுஷ்டானங்கள் ஆகியவற்றை கடைப்பிடிப்பதிலும் குறிப்பிடத்தக்களவு பின்னடைவு காணப்படுவதாகவும், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்தது.

Fri, 05/17/2019 - 11:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை