மீட்கப்பட்ட ரவைகள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டவை

என் மீது வீண் அபாண்டம்

எனது பாதுகாப்புக்காக காத்தான்குடி பொலிஸாரால் வழங்கப்பட்ட துப்பாக்கி ரவைகளே அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன. இத் துப்பாக்கி ரவைகளுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லையென கிழக்கு மாகான ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில்நேற்று சுற்றிவளைப்புகள் இடம்பெற்றபோது, ஆளுநரின் அலுவலகத்திலும் 40 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக

ஆளுநர் நேற்று அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காத்தான்குடி அலுவலகம் பொலிஸாரால் சுற்றிளைக்கப்பட்டபோது எனது பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸாரும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவினரும் காத்தான்குடி பொலிஸாரும் அலுவலகத்துக்குப் பின்னால் தங்கியிருக்கின்றனர். அந்த அறையிலிருந்து உத்தியோக பூர்வமாக காத்தான்குடி பொலிஸாரால் வழங்கப்பட்டு பாதுகாப்புக்காக பயன்படுத்துகின்ற சுமார் 40 துப்பாக்கி ரவைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை உத்தியோகபூர்வமாக பாதுகாப்புக்காக பொலிஸாருக்கு வழங்கப்பட்டவை.

இது தொடர்பாக பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, அலுவலகத்துக்குப் பொறுப்பான இரண்டு சகோதரர்களையும் காத்தான்குடிபொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்களே தவிர இத் துப்பாக்கி ரவைகளுக்கும் எமக்கும் எவ்வித் தொடர்புகளும் இல்லை.

இவை உத்தியோகபூர்வமாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட காத்தான்குடிபொலிஸ் நிலையத்தின் துப்பாக்கி ரவைகள்தான் என்பதை தெளிவாக அறியத்தருகிறோம்

Wed, 05/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை