முதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது

ஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற முதல் அரபு எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஓமான் நாட்டைச் சேர்ந்த ஜோகா அல் ஹரத்தி என்ற பெண் எழுத்தாளருக்கு அவரது செலஸ்டியல் பாடீஸ் என்ற புத்தகத்திற்காக புகழ்பெற்ற சர்வதேச மேன் புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விருதைப்பெற்ற முதல் அரபு எழுத்தாளர் என்ற பெருமையை ஜோகா அல் ஹத்தி பெற்றுள்ளார்.

லண்டனில் நடந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜோகாவுக்கு 50 ஆயிரம் பவுண்ட் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசு தொகையில் பாதியை அந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவருக்கு வழங்க உள்ளதாக ஜோகா அறிவித்துள்ளார்.

அந்தப் புத்தகத்தை அமெரிக்க கல்வியலாளரான மரிலின் பூத் மொழிபெயர்த்திருந்தார்.

“ஓமான் செல்வாக்கு என்னில் தாக்கம் செலுத்தியபோதும் சுதந்திரம் மற்றும் காதல் ஆகிய மனிதப் பெறுமானங்களை சர்வதேச வாசகர்களால் எனது புத்தகத்தில் பார்க்க முடிந்திருப்பதாக நான் நினைக்கிறேன்” என்று ஹரத்தி குறிப்பிட்டுள்ளார்.

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை