மியன்மார் மீதான ஐ.ஒன்றிய தடைகள் தொடர்ந்து நீடிப்பு

ரொஹிங்கியர்களுக்கு எதிரான வன்முறைகளுடன் தொடர்புபட்ட மியன்மார் உயர் அதிகாரிகள் மற்றும் அந்நாட்டுக்கு ஆயுதம் விற்பதற்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது. ஒடுக்குமுறைகளுக்கு பயன்படுத்தக் கூடும் ஆயுதங்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் மீது இந்த தடை உள்ளடங்குகிறது. இது 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதில் தனிப்பட்ட 14 இராணுவ மற்றும் எல்லைக் காவல் படையினர் மீது ஐரோப்பிய ஒன்றிய தடை உள்ளது. இவர்கள் ஐரோப்பிய பிராந்தியத்திற்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதோடு ஐரோப்பாவில் இவர்களின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இவர்கள் மீது கொலை, பாலியல் வன்முறை உட்பட மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மியன்மார் இராணுவத்திற்கு பயிற்சி மற்றும் ஒத்துழைப்புகளை வழங்குவதையும் ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்துள்ளது.

உலகில் அதிக பாகுபாட்டுக்கு முகம்கொடுக்கும் சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் ரொஹிங்கியர்கள் 2012 இனக்கலவரம் தொடக்க மியன்மாரில் வன்முறைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

Wed, 05/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை