வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் பல ஏவுகணை தாக்குதல் ஒத்திகை ஒன்றை மேற்பார்வையிட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் வழியாக வட கொரிய அரசு உறுதி செய்துள்ளது.

ஹோடோ தீபகற்பத்தில் இருந்து ஜப்பான் கடலுக்கு குறுகிய தூர ஏவுகணைகள் கடந்த சனிக்கிழமை வீசப்பட்்டுள்ளன. நாட்டின் தாக்குதல் திறனை அதிகரிக்கும்படி வட கொரியத் தலைவர் உத்தரவிட்டதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறந்த உறவை நோக்கிய வழியில் கிம் பாதகம் விளைவிக்க மாட்டார் என்று தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

“நான் அவரோட இருப்பது வட கொரிய தலைவருக்குத் தெரியும். என்னிடம் அவர் தனது வாக்குறுதியை முறியடிக்கத் தேவையில்லை. உடன்பாடு ஒன்று இடம்பெறும்” என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரியில் வியட்நாமில் நடைபெற்ற கிம்முடனான சந்திப்பில் மோசமான உடன்படிக்கை ஒன்றுக்கு கோரப்படுவதாகக் குறிப்பிட்டு ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தையின் பாதியில் வெளியேறினார்.

இந்நிலையில் நாடு முகம்கொடுக்கும் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில், “அரசியல் இறைமை மற்றும் பொருளாதார தன்னிறைவை பாதுகாக்க வேண்டி உள்ளது” என்று கிம் வலியுறுத்தியதாக வட கொரிய அரச ஊடகம் நேற்று குறிப்பிட்டது.

எனினும் அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே வட கொரியா இந்த ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டிருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வியட்நாம் உச்சிமாநாட்டுக்குப் பின் இடம்பெறும் முதல் சோதனை இதுவாகும். எனினும் நீண்ட தூர ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வதை நிறுத்துவதாக வட கொரிய விடுத்த வாக்குறுதிகளை மீறுவதாக இந்த சோதனை அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை