டொக்டர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை

குருநாகலில் சந்தேகத்திற்கிடமாக கைது செய்யப்பட்ட ​ெடாக்டர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவையென மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி விசனம் தெரிவித்தார்.

மேற்படி ​ெடாக்டரிடம் சிசேரியன் சத்திர சிகிச்சைக்காக சென்ற பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது அடிப்படையற்றது. ஒரு ெடாக்டர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் போது அவருடன் மேலும் நான்கு பேர் உதவியாளராக செயற்படுவர்.

அவர்கள் இது தொடர்பில் இதுவரை எந்த விபரங்களையும் வெளியிடவில்லை. குறித்த ​ெடாக்டர் அவ்வாறான குற்றச்செயலைச் செய்திருந்தால் உதவியாளர்கள் அதனை வெளிப்படுத்தியிருப்பார்களே என்றும் ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

மேற்படி ஆஸ்பத்திரியின் ெடாக்டர் அங்குள்ள ஜே.வி.பி. உறுப்பினர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் இது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். குறித்த

ஆஸ்பத்திரியின் டாக்டர் செய்தியாளர் மாநாடொன்றை கூட்டி இதனை வெளிப்படுத்தியுள்ளார். உண்மையில் முதலில் அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அஸாத் சாலி தெரிவித்தார்.

மேற்படி குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் பல வர்த்தக நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவராவார். வருடமொன்றுக்கு 30 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதிப் புரள்வு அவருடைய வர்த்தக தொடர்புகளிலுள்ளது. அவரது குடும்பப் பின்னணியினரும் வர்த்தகர்களே. இந்த நிலையில், அவரிடம் உள்ள நிதியைக் கொண்டு அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர் என எப்படிக் கூறமுடியும் என்று கேள்வியெழுப்பிய அவர் இது சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டாகும் என்றும் தெரிவித்தார். (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Tue, 05/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை