கோடிக்கணக்கில் நிதி வழங்கிய கோடீஸ்வரர்கள் பொலிஸ் வலையில்

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பு:

தேசிய தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புக்கு பில்லியன் கணக்கில் சொத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு கோடிக்கணக்கான நிதியை வழங்கியுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் பலரை இனங்கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களுள் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நகை வர்த்தகரொருவரை கைது செய்துள்ளதாகவும் மேற்படி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கும் அவ்வதிகாரிகள் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களின் வங்கி வைப்புக்களையும் சோதனைக்குட்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிணங்க தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கோடீஸ்வர வர்த்தகர்கள் பெருமளவு நிதியை அந்தப் பயங்கரவாத அமைப்புக்கு வழங்கியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை இந்தளவு பாரிய நிதி அவர்கள் மேற்கொள்ளும் வர்த்தகங்கள் மூலம் கிடைத்ததா? அல்லது அவர்கள் வேறு ஏதாவது வகையில் நிதியைச் சம்பாதித்துள்ளார்களா? அது எவ்வாறு தௌஹீத் ஜமாத் அமைப்புக்குக் கிடைத்துள்ளது போன்ற விடயங்களைக் கண்டறியும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தௌஹித் ஜமாத் பயங்கரவாதிகளிடமிருந்து 7 பில்லியன் நிதியையும் மேலும் மில்லியன் கணக்கான நிதியை வங்கிக் கணக்குகளில் வைத்துள்ளதாகவும் இதற்கிணங்க பெருமளவு நிதி அந்த அமைப்பின் புழக்கத்திலிருந்ததாகவும் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் அறிந்து கொண்டதுடன் அவர்களின் வங்கிக் கணக்கையும் முடக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிணங்க தேசிய தௌஹித் ஜமாத் பயங்கரவாத அமைப்பின் நிதி, அவர்களது வைப்புக்கணக்கு மற்றும் தற்கொலை தாரிகளாக கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பின் அங்கத்தவர்களின் வங்கிக் கணக்கையும் சோதனையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அமைப்புக்கு உதவியவர்கள் என்ற வகையில் இனங்காணப்பட்டுள்ள வர்த்தகர்கள், ஏனைய தரப்பினர்களினதும் வங்கிக் கணக்குகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன.

மேற்படி அமைப்பபுக்கு உதவிய சகலரையும் இன்னும் குறுகிய காலத்தில் கைது செய்ய முடியுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். (ஸ)

 

 

Thu, 05/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை