பயங்கரவாதம் தலைத்தூக்குவதற்கு இடமளிக்காது ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்

நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். இடிபாடுகளுக்கு உள்ளான தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் புனரமைப்பு செய்ய வேண்டும். மீண்டும் பயங்கரவாத அமைப்பு தலைத்தூக்குவதற்கு இடமளிக்காத வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று ஐ.ம.சு.முபாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று(07)நடைபெற்ற சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எமது சமூகத்தின் குறிப்பிட்டதொரு பிரிவினர் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றம் பெருவார்களென்பது நாம் எந்தவொரு காலத்திலும் நினைத்துக்கூட பார்த்திராத விடயம். அவர்களை நாம் ஒரு காலமும் இஸ்லாமியர்களாக ஏற்றுக் கொள்ளப்பொவதில்லை. அதனால்தான் அவர்களது சடலங்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செயய்வில்லை.

முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. இச்சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு எம்மால் ஆறுதல் கூற முடியாது. அவர்களின் வலிகளும் வேதனைகளும் அவர்களுக்கு மட்டுமே உரியது. குண்டு வெடிப்பினால் உயிரிழந்தவர்களுக்கு எம்மால் ஆறுதல் கூற இயலாது. நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். இடிபாடுகளுக்கு உள்ளான தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் புனரமைப்பு செய்ய வேண்டும். மீண்டும் பயங்கரவாத அமைப்பு தலைத்தூக்குவதற்கு இடமளிக்காத வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றார்.

சபை நிருபர்கள்: லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 05/08/2019 - 13:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை