முஸ்லிம்கள் சார்பாக நிவாரண நிதி கையளிப்பு

அண்மையில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் சேகரிக்கப்பட்டு பேராயர் கர்தினால் ​ெமல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் நேற்று முன்தினம் (27) கையளிக்கப்பட்டது.  

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலைமையிலான குழுவினர் பேராயர் கர்தினால் ​ெமல்கம் ரஞ்சித் ஆண்டகையை அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து இந்நிவாரண நிதியை கையளித்தனர்.  

இதன் போது நாட்டின் தற்போதைய நிலைகள் பற்றியும், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்ப எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வது என்பன போன்ற பலவிடயங்கள் ஆராயப்பட்டன.  

மேலும் முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இவை தொடர்பாக தாமும் சம்பந்தப்பட்ட தரப்போடு பேசுவதாக பேராயர் கர்தினால் ​ெமல்கம் ரஞ்சித் தெரிவித்ததுடன் இடம் பெற்ற தாக்குதல்களை சர்வதேச நிகழ்ச்சி நிரலாகவே தாம் பார்ப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். குறித்த சந்திப்பில் ஜம்இய்யாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத், உதவிச் செயலாளர் அஷ்-ஷெய்க் தாஸிம், ஊடகப் பேச்சாளர் அஷ்-ஷெய்க் பாஸில் பாறூக், கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகளாக இஸ்மாயில் மற்றும் அஸ்லம் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

Wed, 05/29/2019 - 12:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை