ஒப்சேர்வர் விருதை தொடர்ந்து மூன்றுமுறை வெல்லாதது துரதிஷ்டம்

அர்ஜுன ரணதுங்க

உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க 1981 இல் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரருக்கான விருதை வென்றிருந்தால் தொடர்ந்து மூன்று தடவை அந்த விருதை வென்ற பெருமையை பெற்றிருப்பார்.

1980 இல் அர்ஜுன அந்த விருதை வென்றார் அதற்கு முன் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரருக்கான ஆரம்ப விருதை ரஞ்சன் மடுகல்ல வென்றிருந்தார். ஆனால் 1981 ஆம் ஆண்டு விருதை ரொஹான் புல்ஜன்ஸ் வென்றார். அந்த விருதை அர்ஜுன ரணதுங்க இரண்டாவது தடவையாக 1982 இல் வென்றார். அதேபோன்று இந்த விருதை மூன்று முறை வெல்லும் வாய்ப்பு திலான் சமரவீரவுக்கும் கிடைத்தது.

1994 மற்றும் 1995 இல் திலான் சமரவீர இந்த விருதை வென்றார். ஆனால் 1996 இல் திலான் சமரவீரவுக்கு மூன்றாவது முறை விருதை வெல்லும் வாய்ப்பு இருந்தபோதும் 1996 இல் மொரட்டுவை சென். செபஸ்டியன்ஸ் கல்லூரியின் நிமேஸ் பெரேரா விருதை வென்றதால் திலான் சமரவீரவுக்கு இரண்டாவது இடமே கிடைத்தது.

சிந்தக ஜயசிங்க பன்னிபிட்டிய தர்மபால வித்தியாலயத்தின் சிறந்த சகலதுறை கிரிக்கெட் வீரர் 1997 இல் இவர் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதை வென்றார். சக கல்லூரி வீரர் ஒருவர் இந்த விருதை வென்றது இது முதல் தடவையாகும்.

அதிரடி துடுப்பாட்டம் மற்றும் உபயோகமான மிதவேகம் பந்து வீச்சையும் கொண்ட சிறந்த இலங்கையின் ஒரு நாள் அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இலங்கையின் ரி20 மற்றும் ஏ அணிக்கு அப்பால் செல்லும் பாக்கியம் அவருக்கு கிடைக்கவில்லை.

சிந்தகவின் பாடசாலை கிரிக்கெட்டில் மறக்க முடியாத சந்தர்ப்பம் 1995/96 பருவகாலத்தின்போது அவர் கொழும்பு ரோயல் கல்லூரிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்ததாகும்.

இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களின் அணியில் அவர் இடம்பிடித்தார். அதன் மூலம் 1994 இல் மலேஷியாவுக்கும் 1995 இல் இங்கிலாந்துக்கும் அவர் சுற்றுலா சென்றார்.

அத்துடன் 1998 இல் இந்தியாவுக்கு சென்ற இலங்கை ஏ அணியிலும் சிந்தகவுக்கு இடம் கிடைத்தது. அத்துடன் சிம்பாப்வே ஏ அணிக்கு எதிராகவும் அவர் விளையாடினார். BRC கழக அணியை பல வெற்றிகளுக்கு அவர் இட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஏ அணிக்காகவும் இலங்கைக்காக ஐந்து ரி 20 போட்டிகளிலும் விளையாடிய பின் சிந்தக முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதாக தேசிய அணியில் விளையாட தேர்வாளர்கள் தமக்கு ஒரு வாய்ப்பை தர தொடர்ந்து மறுத்து வந்ததால் 34 வயதான நிலையில் அவர் இவ்வாறான முடிவை எடுக்க காரணமாக அமைந்தது.

2009 டிசம்பர் முதல் 2010 மே வரையிலான காலகட்டத்தில் அவர் ஐந்து ரி20 போட்டிகளில் விளையாடினார். ஆனால் மூன்று இன்னிங்ஸ்களில் அவர் அதிகபட்சமாக 38 ஓட்டங்களையே பெற முடிந்தது.

உள்ளூர் போட்டிகளில் அவர் பந்து வீச்சாளராகவே விளையாடினார். 24.48 என்ற சராசரியில் அவர் 104 விக்கட்டுகளை கைப்பற்றினார். ஆனால் அவர் சர்வதேச போட்டிகளில் பந்து வீசவில்லை. பின்னர் அவர் அவுஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினார். அதன் பின்னர் ஆறு மாதகாலம் இங்கிலாந்திலும் உள்ளூர் அணியொன்றுக்காக விளையாடினார் எனினும் 2012 இல் இலங்கை கிரிக்கெட் சபை வீரருக்கு ஒப்பந்தம் போட்டது. ஆனால் சிந்தக அந்த 60 பேரில் இடம்பெறவில்லை கிரிக்கெட்டில் இருந்து ஒய்வுபெறும் அவரது தீர்மானத்துக்கு அடிப்படையாக இருந்தது இது தான்.

14 வருடங்கள் இலங்கையின் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளேன். ஆனால் இலங்கை அணியின் தேர்வாளர்களால் குழு ஒரு சில வீரர்களுக்கு மிகவும் சாதகமாக நடந்துகொள்கிறது. ஆனால் அந்த ஒரு சில வீரர்கள் பெரிதும் சோபிக்காத வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. என்று கூறும் சிறந்த இலங்கை கிரிக்கெட் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகத் தெரியவில்லை. சிரேஷ்ட வீரர்கள் தேசிய அணியில் இருந்து விலகிய பின் நிலைமை மோசமாகும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

சிந்தக இலங்கை பிரிமியர் லீக் சுற்றுப் போட்டியில் ஊவா அணிக்காக விளையாடியிருந்தார். இறுதியாக அவர் புலூம்பீல் அணிக்காக விளையாடியிருந்தார். அதற்கு முன் BRC மற்றும் NCC அணிகளுக்காக அவர் விளையாடியிருந்தார்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடசாலை கிரிக்கட் வீராங்கனை ஆகியோருக்கான போட்டி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. போட்டி முடிவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அடுத்த கட்ட போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

41 ஆவது மெகா ஒப்சேர்வர் விருது வழங்கல் நிகழ்வு விரைவில் இடம்பெறவுள்ளது. சன்டே ஒப்சேர்வர் மற்றும் மொபிடெல் ஆகியவை இதற்கு அனுசரணை வழங்குகின்றன.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் பிரதான போட்டித் தீர்ப்பாளரான ரஞ்சன் மடுகல்ல கலந்துகொள்கிறார். ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான முதலாவது விருதை பெற்றவர் ரஞ்சன் மடுகல்ல ஆவார். 41 ஆவது நிகழ்வில் அவர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

கடந்த வருடம் (2018) இடம்பெற்ற 40 ஆவது ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரருக்கான விருது வழங்கலில் கண்டி திரித்துவக் கல்லூரியின் முன்னாள் தலைவர் ஹஸித போயகொட ஒப்சேர்வர் விருதை வென்றார்.

இளைஞர் உலக கோப்பை கிரிக்கெட் சுற்றுப் போட்டியின்போது உலக சாதனையை நிலைநாட்டிய ஹஸிதவுக்கு தேசிய பாடசாலை கிரிக்கெட் வீரர் 2018 விருதும் கமிந்து மெண்டிஸுக்கு 19 வயதுக்குட்பட்ட டிவிசன் 1 பாடசாலை கிரிக்கெட் வீரர் 2018 விருதும் வழங்கப்பட்டன.

பாடசாலைகளுக்கிடையிலான 7 போட்டிகளில் கமிந்து மெண்டிஸ் 85. 29 என்ற சராசரியில் மொத்தம் 597 ஓட்டங்களைப் பெற்றார். அண்மையில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பை சுற்றுப் போட்டியில் கமிந்து மெண்டிஸ் இலங்கை அணிக்கு தலைமை தாங்கியதுடன் இலங்கை அணி பிலேட் விருதினை வென்றமை குறிப்பிடத்தக்கது.

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகளிர் பிரிவில் சிறந்த சகலதுறை வீராங்கனையாக அனுலா வித்யாலய மாணவி ஹர்ஸிது மாதவி தெரிவானார்.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் வசில் குருஸ்புள்ளே டிவிசன் 1 பிரிவில் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் தலைவர் சவிந்து பீரிஸ் பந்து வீச்சாளர் விருதையும் வென்றனர். மஹீஸ் திக்சன சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக தெரிவானார்.

ஆண்டின் சிறந்த அணியாக காலி ரிச்மன்ட் கல்லூரி அணி தெரிவாகியது. சிறந்த ஒழுக்கத்துடன் கூடிய அணியாக நாலந்த கல்லூர அணி தெரிவாகியது.

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை