சுமத்ரா காண்டாமிருகத்தின் கடைசி ஆண் உயிரிழப்பு

மலேசியாவில் இருந்த சுமத்திரா காண்டாமிருகத்தின் ஆண் ஒன்று உயிரிழந்துள்ளதால் அந்த இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போர்னியோ தீவில் வசித்து வந்த அந்த ஆண் காண்டாமிருகம் டொம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் இருந்த டொம் கடந்த திங்களன்று உயிரிழந்தது.

டொம்மின் மரணத்திற்கு அதன் வயதும் பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததும் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் சுமத்ரா தீவின் கடைசி ஆண் காண்டாமிருகத்தின் இழப்பால் அந்த இனம் பூண்டோடு அற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்த ஆண் காண்டாமிருகத்தின் உயிரணு சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறும் விஞ்ஞானிகள், செயற்கைக் கருவூட்டல் மூலம் அந்த இனத்தை உயிர்ப்பிப்பது சவாலான விடயம் என்று கூறியுள்ளனர். 20 வயதாக இருக்கும்போது, டொம் வனவிலங்குக் குழுவினரால் 2008ஆம் ஆண்டு ஓக்ஸ்ட் மாதம் பிடிக்கப்பட்டது.

Wed, 05/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை