கிளிக்குஞ்சுக்கு முதல்முறை மூளை அறுவைச் சிகிச்சை

நியூசிலாந்தில் உள்ள விலங்குகள் நல மருத்துவர்கள் பிறந்து 56 நாட்களே ஆன கிளிக்குஞ்சு ஒன்றுக்கு, உலகிலேயே முதல் முறையாக மூளை அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அழியும் நிலையில் உள்ள உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள, நியூசிலாந்தை பூர்விகமாகக் கொண்ட காகபோ வகைக் கிளிகள் தற்போது வெறும் 144 மட்டுமே உள்ளன.

நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள காட்பிஷ் தீவில் இருந்த இந்தக் கிளிக் குஞ்சின் தலையில் வழக்கத்துக்கு மாறான வீக்கம் இருப்பதை கண்ட விலங்குகள் பாதுகாப்புத் துறையின் காகபோ கிளிகள் மீட்புக் குழுவினர் அதன் மண்டை ஓட்டில் துளை இருப்பதைக் கண்டறிந்தனர். உலகில் உள்ள கிளி இனங்களிலேயே பருமனான காகபோ வகை கிளிகளால் பறக்க முடியாது. இவை இரவு நேரங்களிலேயே வெளியில் நடமாடும் இயல்புடையவை.

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை