இராணுவம் - ஆர்ப்பாட்டக்காரர் மோதல்: சூடானில் ஐவர் பலி

சூடான் தலைநகர் கார்டூமில் இடம்பெற்ற மோதல்களில் நான்கு ஆர்ப்பாட்டக்காரர் மற்றும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

முழுமையான சிவில் அரசொன்றை ஏற்படுத்தக் கோரிய இராணுவத் தலைமையகத்திற்கு வெளியில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

படையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டியபோதும், இனந்தெரியாத தரப்புகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷிர் கடந்த மாதம் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் நிலைமாற்ற இராணுவ கவுன்ஸில் ஒன்றே ஆட்சி புரிந்து வருகிறது.

இந்நிலையில் சிவில் அரசொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் ஆளும் ஜெனரல்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னெற்றம் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Wed, 05/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை