உலகக்கிண்ண பயிற்சி போட்டியில் ஆஸியிடம் வீழ்ந்தது இலங்கை

உலகக் கிண்ண தொடருக்கான 7 ஆவது பயிற்சி போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட்கள் வித்தியசத்தில் வீழ்த்தி அவுஸ்ரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.

சவுதம்டனில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் பிரகாரம் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 239 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பாக லஹிரு திரிமன்னே 56 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 43 ஓட்டங்களையும் குஷால் மெண்டிஸ் 24 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக அடம் சாம்பா 2 விக்கெட்களை வீழ்த்த மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், க்ளென் மக்ஸ்வெல், நாதன் லியோன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 240 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி இலக்கு என்ற ரீதியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி 44.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

அவ்வணி சார்பாக உஷ்மன் கவாஜா 89 ஓட்டங்களையும் க்ளென் மக்ஸ்வெல் 36 ஓட்டங்களையும் ஷோன் மார்ஷ் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் இலங்கை சார்பாக வண்டர்சே 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

Wed, 05/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை