உலக கிண்ண கிரிக்கெட் தலைவர்கள் மகாராணியுடன் சந்திப்பு

உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 10 நாடுகளின் கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்தனர்.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12-வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நேற்று தொடங்குகியது. ஜூலை 14ம் திகதி வரை 11 இடங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது.

இதில் இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்ஆபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவு, இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனைத்து அணியினரும் கடந்த வாரம் இங்கிலாந்து சென்று பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றன. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி நேற்று தொடங்கியது.

இந்நிலையில், இங்கிலாந்தின் ராணி எலிசபெத்துடன் 10 நாட்டு கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் சந்தித்தனர். அவர்கள் ராணியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Fri, 05/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை