துருக்கியில் ஆளும் கட்சி தோற்ற இஸ்தான்புல் நகரில் மறு தேர்தல்

மார்ச் மாதம் அதிர்ச்சியூட்டும் வகையில் எதிர்க்கட்சி வெற்றிபெற்ற நிலையில், இஸ்தான்புல் மாநகர உள்ளாட்சித் தேர்தலை மீண்டும் நடத்த துருக்கியின் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நடைபெற்ற தேர்தலில் மோசடிகளும், ஊழலும் நடைபெற்றதாக கூறி, சி.எச்.பீ என்ற எதிர்க்கட்சி நூலிழையில் வென்றதை துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானின் ஏ.கே கட்சி ஏற்றுகொள்ளவில்லை.

“தேர்தலை மீண்டும் நடத்தவிருப்பது, ஏ.கே கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெறுவது சட்டபூர்வமற்றது என்பதை சுட்டிக்காட்டுகிறது” என்று சி.எச்.பீயின் துணை தலைவர் அனுர்சால் அடிகுசெலர் கூறியுள்ளார். துருக்கியின் மிக பெரிய நகரத்தில் மறுதேர்தல் ஜூன் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. சில தேர்தல் அதிகாரிகள் அரசு ஊழியர்களாக இல்லாமலும், தேர்தல் முடிவின் சில ஆவணங்கள் கையெழுத்திடப்படாமலும் இருந்ததால் மறுதேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திலுள்ள ஏ.கே கட்சியின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இத்தகைய முடிவு “அப்பட்டமான சர்வாதிகாரம்” என்று அடிகுசெலர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Wed, 05/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை