நாளை அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிப்பதில் உண்மை இல்லை

RSM
நாளை அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிப்பதில் உண்மை இல்லை-No Threat on 13th May-Ruwan Gunasekara

நாட்டின் பாதுகாப்பு உச்ச நிலையில்

நாளைய தினம் (13) அச்சுறுத்தல்கள் இருப்பதாக கூறப்பட்டுவரும் தகல்கள் பாதுகாப்பு தரப்பினராலோ புலனாய்வு தரப்பினராலே உறுதிப்படுத்தப்படாத தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது மக்கள் வீணாக எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என்றும் பாதுகாப்பு தரப்பினர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நாட்டின் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸாரும் முப்படையினரும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அதேபோன்று இன்றைய தினம், ஞாயிறு சமய வழிபாடுகள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் எவ்வித தடங்களும் இன்றி இடம்பெற்றதாக தெரிவித்த அவர், பொது மக்கள் எவ்வித அச்சமுமின்ற அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் :-

நாளைய தினம் (13) தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் பலரும் அச்சத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த தகவல்கள் பாதுகாப்பு தரப்பினராலோ புலனாய்வு தரப்பினராலே உறுதிப்படுத்தப்படாதவைகள். பொலிஸாருக்கு கிடைக்கப்பெறும் எந்தவொரு தகவல்களையும் நாம் தட்டிக்களிப்பதில்லை மாறாக அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி பாதுகாப்பு தரப்பினர்களுடன் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

அதேபோன்று பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எவ்வித குறைபாடுகளும் இன்றி நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.

விஷேடமாக இன்றைய ஞாயிறு சமய வழிபாடுகள் எவ்வித தடையின்றி முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் மேலதிக வகுப்புகளுக்கு வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்பட்டது.

எனவே, பாதுகாப்பு தரப்பினரால் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ளமால் அண்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்குமறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.

(ஸாதிக் ஷிஹான்)

Sun, 05/12/2019 - 20:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை