பேராதனையில் மும்மொழி கலப்பு பாடசாலை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்

கண்டி, பேராதனையில் மும்மொழி கலப்பு பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த தீர்மானத்திற்கே, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பேராதனையில் 10ஏக்கர் காணியில் 1141.46மில்லியன் ரூபா செலவில் மும்மொழி கலப்பு பாடசாலை அமைக்கப்படவுள்ளதோடு, தரம் 1முதல் 6வகுப்பறைகளைக் கொண்டதாக இப்பாடசாலை அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்டி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதில் போட்டித்தன்மை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால், கண்டி நகரிற்கு அருகில் கலப்பு பாடசாலையொன்றை ஆரம்பிப்பதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பை  விரிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பம் தொடர்பில் அரசாங்கத்தில்; கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 05/08/2019 - 13:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை