ஹுவாவியின் இயங்குதளம் அடுத்த ஆண்டில் தயார்

ஸ்மார்ட்போர்ன் மற்றும் கைபேசிகளுக்கான சொந்தமான இயங்குதளம் ஒன்றை வெளியிடப்போவதாக ஹுவாவி குறிப்பிட்டுள்ளது. இதன் சர்வதேச பதிப்பு 2020 இன் முதலாவது அல்லது இரண்டாவது காலாண்டில் தயாராகும் என்று ஹுவாவியின் வாடிக்கையாளர் வர்த்தகத் தலைவர் ரிசார்ட் யூ குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தடையால் கூகுல் நிறுவனம் தனது ஆண்ட்ரொயிட் இயங்குதளத்தில் இருந்து ஹுவாவி சாதனங்களை நீக்கியது.

“மைக்ரோசொப்ட் விண்டோஸ் மற்றும் கூகுள் ஆண்ட்ரோயிடுடன் ஹுவாவி இன்றும் இணைந்துள்ளது. ஆனால் அவைகளை பயன்படுத்த முடியாமல் போனால், எமது சொந்தமான இயங்குதளத்துடன் ஹுவாவி மாற்றுத் திட்டத்திற்கு தயாராகி வருகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘ஹொங்மெங்’ என்ற பெயர் கொண்ட தளம் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அது ஆண்ட்ரொயிட் முறைக்கு பதில் படிப்படியாக நிறுவப்படும் என்றும் சீன அரச ஊடகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

“எமக்கு இது தேவையில்லை அமெரிக்க அரசு இதனைச் செய்ய எம்மை நிர்ப்பந்தித்துள்ளது. அமெரிக்கா இப்படியாக நினைப்பதாக இருந்தால் எமக்கு மாத்திரம் அது கெட்ட செய்தியாக இருக்காது நாம் ஆதரிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் கெட்ட செய்தியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று ரிசார்ட் யூ அமெரிக்காவின் சி.என்.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்

Fri, 05/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை