பிர்லியன்ட் வெற்றிக் கிண்ணம்: இறக்காமம் ஹொலிவுட் கழகம் வெற்றி

இறக்காமம் ஓல்ட் போய்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொளியிலான 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப் பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இறக்காமம் ஹொலிவுட் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.

பிர்லியன்ட் வெற்றிக் கிண்ணம் 2019 என பெயரிடப்பட்டு இறக்காமம் குளக்கரை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இறக்காமம் ஹொலிவுட் அணியினர் 03 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இரவு நேர போட்டியாக கடந்த 12.04.2019 திகதி முதல் தொடராக 5 நாட்கள் அம்பாரை மாவட்டத்தில் உள்ள பிரபலமான 50 மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இப் பொட்டியின் இறுதிச் சுற்றுப்போட்டியில் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எம் .எல்.முஸ்மி பிரதம அதிதியாக கலந்து கொண்டுவெற்றி அணிக்கு சம்பியன் கிண்ணமும் 30,000.00ரூபா பெறுமதியான பணப்பரிசையும் வழங்கி வைத்தார்.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இறக்காமம் ஹொலிவுட் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 3 விக்கட்டுக்களை இழந்து ஐந்து ஓவர்கள் முடிவில் 50 ஓட்டங்களை பெற்றனர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை யுனிட்டி அணியினர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் அவர்கள் சகல விக்கட்டுக்களையும் இழந்து ஐந்து ஓவர்கள் முடிவில் 47 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்த னர்.

இறுதிப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஹொலிவுட் அணியின் என்.எம்.சாஹிர் ஆட்ட நாயகன் விருதினையும், இப் போட்டித் தொடரின் தொடர்ஆட்ட நாயகன் விருதினை ஹொலிவுட் அணியின் எம்.அதிப் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட சம்மாந்துறை யுனிட்டி அணிக்கு 20,000.00 ரூபா பணப் பரிசும் கிண்ணமும் பிரதம அதிதியால் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இப் போட்டியின் நடுவர்களாக ஏ.எல். தௌபீக் மற்றும் பீ.எம்.றஸீன் ஆகியோர் கடமையாற்றினர்.

ஹிங்குறாணை குறூப் நிருபர்

Thu, 05/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை