தீவிரவாத அமைப்புகள் தடை; அதி விசேட வர்த்தமானி வௌியீடு

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றும் தீவிரவாதத்தை தூண்டுகின்ற அமைப்புகளாக கருதப்படும் தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) ஜமாஅத்தே மில்லத்து இப்ராஹிம் (JMI)  மற்றும் விலாயத் அஸ்செய்லானி ஆகிய அமைப்புகளை தடை செய்வதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (13) ஜனாதிபதியினால் குறித்த அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற வகையில் 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசர கால (சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) கட்டளையின் கீழ் உள்ள அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால், தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கம் – National Thowheed Jamath (NTJ) ஜமாஅத்தே மில்லத்து இப்ராஹிம் - Jamath e Millathu Ibraheem Zeilani (JMI), மற்றும் விலாயத் அஸ்செய்லானி - Willayath As Seylani ஆகிய இயக்கங்களை இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களாக கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பிரகடனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறி்ப்பிடத்தக்கது.

அதற்கமைய அவ்வியக்கங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் செயற்பட்டுவரும் ஏனைய இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகளும் அவசர கால கட்டளையின் கீழ் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்திருந்தார். 

Tue, 05/14/2019 - 10:46


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக