பள்ளிக்குடியிருப்பு முகம்மதியா விளையாட்டுக் கழகத்திற்கு புதிய சீருடை அறிமுகம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஏ.எம்.அஸ்ஹரின் நிதியின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு முகம்மதியா விளையாட்டுக் கழகத்திற்கான புதிய சீருடைகளை வழங்கி அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.

முகம்மதியா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.பி.என்.றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச சபையின பிரதி தவிசாளர் ஏ.எம்.அஸ்ஹர் பிரதம அதிதியாகவும். பள்ளிக் குடியிருப்பு முகம்மதியா வித்தியாலய அதிபர் எம்.எச்.பதுறுதின். பள்ளிக்குடியிருப்பு பிரதேச கிரம சக்தி மக்கள் சபையின் தலைவர் ஏ.எல்.எம்.பாஹிம், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.இஸ்ஹாக், ஏ. றிப்தி ஆசிரியர் உட்பட கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளிக்குடியிருப்பு முகம்மதியா விளையாட்டுக் கழகம் விளையாட்டுக் கழகமானது விளையாட்டுத்துறையில் அண்மைக்காலமாக பல சாதனைகளை நிலை நாட்டி வருவதுடன் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பல்வேறு சமூகம் சார்ந்த சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாலமுனை கிழக்கு தினகரன் நிருர்

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை