ஈரானை எச்சரிக்க அமெரிக்க விமான தாங்கி கப்பல் விரைவு

ஈரானுக்கு தெளிவான செய்தியை வழங்கும் வகையில் அமெரிக்கா தனது விமான தாங்கிக் கப்பல் ஒன்றை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தவுள்ளது.

பல தொந்தரவு தரும், பதற்றத்தை அதிகரிக்கும் குறிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா செயல்படுவதாக அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதை அடுத்தே போர்க் கப்பல் அனுப்பப்படுவதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கப் படையினர் மீதோ, அதன் கூட்டாளிகளின் படையினர் மீதோ ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் தணியாத ஆற்றலோடு பதிலடி தரப்படும் என்று ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார்.

யு.எஸ்.எஸ் ஆப்ரஹாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுவும், குண்டு வீச்சு படையும், அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது தெளிவான செய்தியை ஈரான் அரசுக்கு அனுப்பும் என்று போல்டன் தெரிவித்துள்ளார்.

Tue, 05/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை