இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி

இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவில்ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்  கடந்த மாதம் 17 ஆம் திகதி   நடைபெற்றது. வாரக்கணக்கில் நீடித்த வாக்குகளை  எண்ணும் பணி முடிவடைந்ததைஅடுத்து, ஜோகோ விடோடா (57) வெற்றி பெற்றுள்ளதாக,அந்நாட்டு தேர்தல்கள்ஆணையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

விடோடோவிற்கு 55.5 சதவீதமான வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான  ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 சதவீதமான வாக்குகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள்  ஆணையகம் தெரிவித்துள்ளது. 

 

 

Tue, 05/21/2019 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை