தனியார் கல்வி நிறுவனமாக நடத்தவும் அனுமதிக்க முடியாது

மட்டக்களப்பு பல்கலையை

இலங்கையரென்ற தனித்துவத்தை முஸ்லிம்கள் பேணவேண்டும்

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை தனியார் கல்வி நிறுவனமாகவும் நடத்திச்செல்ல அனுமதியளிக்க முடியாது. அதனை அரசாங்கப் பல்கலைக்கழகமாக மாற்றியமைக்க வேண்டுமென பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இலங்கையில் எவரும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமையுள்ளது. ஆனால், இலங்கையின் தனித்துவக் கலாசாரத்தை பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு

சுட்டிக்காட்டியுள்ளார். அவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் எந்த மதத்தை பின்பற்றுகிறார்கள் என்பது பிரச்சினையல்ல. ஆனால், அனைவரும் இந்நாட்டின் கலாசாரத்தின்படி செயற்பட வேண்டும். பிரார்த்தனைகளுக்காக மக்கா செல்வதும் பிரச்சினையல்ல. ஆனால், முஸ்லிம்கள் இலங்கையர்களென்ற தனித்துவத்தை பேணுபவர்களாக இலங்கையில் வாழவேண்டும்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை தனியார் கல்வி நிறுவனமாகவேனும் நடத்திச்செல்ல அனுமதியளிக்க கூடாது.

அதனை அரசாங்கப் பல்கலைக்கழகமாக மாற்றியமைக்க வேண்டும். மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் மதரஸாக்களை சுதந்திரமான கல்வி நிறுவனங்களாகச் செயற்பட அனுமதிக்க முடியாது. மதரஸா கல்வி நிறுவனங்களில் கற்பிக்க வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் மதபோதகர்கள், அல் குர்ஆனில் வன்முறைகளை தூண்டும் வகையில் போதனைகள் உள்ளதாக மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர். இதனால்தான் அடிப்படைவாதக் கருத்துகள் வலுப்பெறுகின்றன.

ஆகவே, பயங்கரவாதத்தை தடுக்க வலுவான சட்ட விதிமுறைகளை நாம் தயாரிக்க வேண்டும் என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை