மாணவர்களின் வரவு வழமைக்கு

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு, இன்றைய தினம் (21) அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களின் வரவு 90 வீதத்திற்கும் அதிகமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அனைத்துப் பாடசாலைகளினதும் பாதுகாப்புக் கருதி,   இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்த கூட்டு பாதுகாப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.  

பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் மேலதிக பைகள் எதனையும் கொண்டு வரவில்லை எனவும், இன்றைய கல்வி நடவடிக்கைக்கு அவசியமான புத்தகங்களை மாத்திரம் பாடசாலைக்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  

உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பின் சில இடங்களிலும் மட்டக்களப்பிலும் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டன.

இரண்டாம் தவணைக்காக மே 06 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவில் சற்று மந்த நிலை காணப்பட்டு வந்தது. ஆயினும், இன்றைய தினம் மாணவர்களின் வரவு குறிப்பிடும்படியாக அதிகரித்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Tue, 05/21/2019 - 16:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை