ஞானசார தேரர், மௌலவிமார்களை சாட்சிக்கு அழைக்க தெரிவுக்குழு முடிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதவி வகித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர்கள் ,பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் சஹ்ரான் குறித்து முன்கூட்டி தகவல் தெரிவித்த மௌலவிமார்கள் ஆகியோரை அழைப்பதற்கு தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது.  

மேற்படி குழுவின் முதலாவது அமர்வு நேற்று பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.தாக்குதலுக்கு முன்னதாக குறித்த பயங்கரவாதிகள் தொடர்பாக சில மௌலவிமார்களும்,ஞானசார தேரரும் முறையிட்டிருந்ததாக கூறப்படுவது தொடர்பில் குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தார்கள்.அவர்களை சாட்சியமளிக்க அழைக்குமாறு, அவர்கள் தெரிவுக்குழு தலைவரை கோரினார்கள். இதற்குப் பதிலளித்த தெரிவுக்கு குழு பதில் தலைவர் ஜெயம்பதி விக்ரமரத்ன, அவர்களை அழைப்பதாக அறிவித்தார்.   2009 இற்கு பின்னர் பாதுகாப்பு செயலாளர்களாக செயற்பட்டவர்களையும் அழைக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டது.அதற்கும் உடன்பாடு காணப்பட்டது.(பா)

(ஷம்ஸ் பாஹிம்)  

Thu, 05/30/2019 - 11:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை