உளவியல் கற்கைநெறி

புத்தளம் பீ.சி.எம்.எச். நிறுவனம், கொழும்பு அமேசன் உயர் கல்வி நிறுவனத்துடன் இணைந்து டாக்டர் ஏ.பீ.ஜெ. அப்துல் கலாம் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக உளவியல் சான்றிதழ் கற்கைநெறியொன்றை புத்தளத்தில் நடாத்த ஏற்பாடுகள் செய்துள்ளது. 

பயிற்சி பாட நெறி காலம் நான்கு மாதங்களாகும். பாடங்கள் வார இறுதி நாட்களில் புத்தளத்தில் இடம்பெறும். க.பொ.த சாதாரண தரம் பயின்ற, 19 முதல் 50 வயது வரைக்குமான ஆண்,  பெண் இரு பாலாரும் விண்ணப்பிக்கலாம். சமூக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களின் அனுபவம் பிரதானமாக கருதப்படுவதால் இந்த கல்வி தகைமை கருத்திற்கொள்ளப்பட மாட்டாது. 

தமிழ்மொழி மூலம் நடைபெற உள்ள இந்த பாடநெறியில் பலதுறை சார் விரிவுரையாளர்கள் வளவாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர். 

விண்ணப்பங்கள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு,ஏ.எச்.எம். றிஸ்வான, திட்ட முகாமையாளர், பீ.சி.எம்.எச். சமூக அபிவிருத்தி நிறுவனம் இல:09,  வான் வீதி, புத்தளம் எனும் முகவரியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். 

(புத்தளம் தினகரன் நிருபர்)

Sat, 05/04/2019 - 08:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை