ஒரு பெண்ணுக்கு கருத்தடை செய்திருந்தாலும் கடும் நடவடிக்ைக

சர்ச்சைக்குரிய குருநாகல் மருத்துவர் ஒரு பெண்ணுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்திருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்ைக எடுக்கப்படும் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

குருநாகலில் பௌத்த மத பெண்களுக்கு சிசேரியன் சத்திர சிகிச்சையுடன் கருத்தடை சிகிச்சையையும் மேற்கொண்டார் என சந்தேகிக்கப்படும் மருத்துவர் தொடர்பில் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற  செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் மத்தும பண்டார, மேற்படி மருத்துவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடும் தண்டனையை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

எண்ணாயிரம் பேருக்கு அவர் கருத்தடை சிகிச்சையை செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒருவருக்கு அவ்வாறு செய்திருந்தாலே அவருக்குத் தண்டனை உறுதி என்றும் அமைச்சர் வேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Wed, 05/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை