பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு தெரேசா மே வாழ்த்து

பிரித்தானிய இளவரசர் ஹரி -மேகன் மாக்கில் தம்பதியினருக்கு ஆண் குழந்தையொன்று கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, வாழ்த்துகள் குவிந்த வண்ணமுள்ளன.

பிரதமர் தெரேசா மே, தொழிற்கட்சித் தலைவர் ஜெரெமி கோர்பியன் (Jeremy Corbyn)  ஸ்கொட்லாந்து முதலமைச்சர் Nicola Sturgeon உட்பட அரசியல்வாதிகள் தமது வாழ்த்துகளை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளனர். அத்தோடு, உலகெங்கிலுமிருந்து இளவரசர் ஹரி -மேகன் மாக்கில் தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணமுள்ளதாக, வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

இளவரசர் ஹரி –மேகன் மாக்கில் தம்பதியினருக்கு நேற்று (06) 3.2 கிலோகிராம் நிறையில் ஆண் குழந்தையொன்று கிடைத்துள்ளதோடு, பிரித்தானிய முடிக்குரிய அரியணையின் 7 ஆவது வாரிசாக குறித்த குழந்தை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி, வின்ஸ்டர் கோட்டையிலுள்ள சென்.ஜோர்ஜ் சப்பல் தேவாலயத்தில்  இளவரசர் ஹரியும் மேகன் மாக்கிலும் திருமண பந்தத்தில் இணைந்திருந்தனர்.

 

Tue, 05/07/2019 - 15:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை