பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் 7 வேட்பாளர்கள்

பதவி விலகிய பிரிட்டன் பிரதமர் தெரேசா மேயின் இடத்திற்கு இதுவரை ஏழு வேட்பாளர்கள் போட்டியில் குதித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்காக பிரெக்ஸிட் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் தோல்வி அடைந்த நிலையில், மே கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்தார். இது பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பிளவை மேலும் அதிகரித்திருப்பதோம் இந்தப் பிரச்சினை பாராளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தெரேசா மே இன் இந்த அறிவிப்பையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டி ஆரம்பமாகியுள்ளது. இக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பவரே பிரிட்டனின் அடுத்த பிரதமரும் ஆவார் என்ற நிலையில் ஜூலை இறுதிக்குள் இந்த அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப் படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

இதன்படி புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் சுகாதார அமைச்சர் மட் ஹங்கொக், பிரெக்ஸிட் முன்னாள் அமைச்சர் டொமினிக் ராப் மற்றும் பிரதிநிதிகள் அவைத் தலைவர் அன்ட்ரியா லீட்சன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை இணைந்துகொண்டனர்.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் மொரிஸ் ஜோன்ஸன், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹன்ட், உள்ளக அபிவிருத்திச் செயலாளர் ரோரி ஸ்டுவர்ட் மற்றும் முன்னாள் தொழில் மற்றும் ஓய்வூதிய அமைச்சர் எய்தர் மக்வெய் ஆகியோர் ஏற்கனவே தாம் பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதாக அறிவித்தனர்.

கன்சர்வேடிவ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காணரமாக மே கொண்டுவந்த ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்ஸிட் உடன்படிக்கை பிரிட்டன் பாராளுமன்றத்தில் 3 முறை தோல்வி அடைந்தது. இதனால் மார்ச் 29 ஆம் திகதி இருந்த பிரெக்ஸிட் திகதி ஒக்டோபர் 31 வரை நீடிக்கப்பட்டது.

இந்நிலையில் தெரேசா மேயின் உடன்படிக்கையில் திருத்தம் கொண்டுவருவது அல்லது ஒருமித்த நிலைப்பாட்டை கட்டி எழுப்புவதாக அனைத்து வேட்பாளர்களும் வாக்குறுதி அளித்துள்ளனர். இந்த உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூன் 7 ஆம் திகதி தான் பதவி விலகப் போவதாக தெரேசா மே அறிவித்துள்ளார். இதனால் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைப் பொறுப்புக்கு ஜுன் 12 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Mon, 05/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை