சமுர்த்தி உதவி பெறுவோராக மேலும் 6 இலட்சம் பேர் இணைப்பு

இரண்டு வாரங்களில் உரிமைப் பத்திரம்

சமுர்த்தி உதவி பெறுவோராக புதிதாக மேலும் ஆறு இலட்சம் பேரை இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாடளாவிய ரீதியில் பயனாளிகளுக்கு அதற்கான உரிமைப் பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இதற்கான நிகழ்வுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் சில நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளதாக

ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

இதற்கிணங்க, முதலாவது தேசிய நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அம்பாறையில் எதிர்வரும் 30 ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பொலநறுவை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் எதிர்வரும் 31 ஆம் திகதி இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

ஜூன் முதலாம், இரண்டாம் திகதிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்நிகழ்வுகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இடம்பெறவுள்ளன.

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் ஜூன் 09 ஆம் திகதியும் ஜூன் 13 ஆம் திகதி மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலும் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் ஜூன் 15 ஆம் திகதி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 05/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை