50ஆவது மாடிக்கு மேல் ஊசலாடியவர்கள் மீட்பு

அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் கண்ணடி துடைக்கும் ஊழியர்கள் இருவர் 50 மாடி கட்டடத்தின் உச்சியில் கட்டுப்பாட்டை இழந்த இரும்புத் தொட்டி ஒன்றில் ஊசலாடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

டெவோன் கோபுரத்தின் உயரத்தில் உள்ள ஜன்னல்களை அந்த ஊழியர்கள் துடைத்துக் கொண்டிருந்தபோதே கிரேன் கருவி நிலைதடுமாறி ஊசலாட ஆரம்பித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் அந்த ஊழியர்கள் இருந்த தொட்டி அங்குமிங்கும் ஊசலாடி கண்ணாடிகளை உடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பாளர்கள், முதலில் இடத்தைச் சுற்றிப் பாதுகாப்புத் தடுப்புகளைப் போட்டனர். 50ஆம் மாடிக்குச் சென்று மணல் பைகளால் ஆடும் தளத்தை நிறுத்தினர். அதன் பின்னர், ஊழியர்களை தீயணைப்பாளர்கள் மீட்டனர்.

சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. தளத்தில் கோளாறு குறித்து விசாரணை தொடர்கிறது.

Fri, 05/17/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக