‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்திற்காக 4ஆவது முறை வாக்கெடுப்பு

மூன்று முறை தோல்வி அடைந்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் பல்வேறு திருத்தங்களோடு 4ஆவது முறையாக பிரட்டன் பாராளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தை அந்நாட்டு பிரதமர் தெரசா மே தயார் செய்தார். இந்த ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு பிரிட்டன் பாராளுமன்றத்தில் மூன்று முறை நடத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் உள்ள வரைமுறைகளில் பிரிட்டன் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் தொடர்ந்து முரண்பாடு ஏற்பட்டதால் வாக்கெடுப்பு 3 முறையும் தோல்வி அடைந்தது.

இதையடுத்து ஒப்பந்தத்தில் திருத்தம் கொண்டு வர தெரசா மே கால அவகாசம் கோரியதை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு மீண்டும் நான்காவது முறையாக வரும் ஜூன் மாதம் நடைபெறும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை