சாய்ந்தமருதில் காணாமல் போன 3 மீனவர்களும் கரை திரும்பினர்

அம்பாறை, சாய்ந்தமருதிலிருந்து  மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன  3 மீனவர்களும் 4 நாட்களின் பின்னர் கரை திரும்பியுள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி சாய்ந்தமருது நடுத்துறைக் கடற்கரையிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற  குறித்த 3 மீனவர்களும் காணாமல் போயிருந்தனர்.  

இவர்களை  தேடிச் சென்ற ஏனைய மீனவர்கள், பொத்துவில் கடற்பரப்பிலிருந்து சுமார்15 மணிநேர தூரத்திலுள்ள பொத்தான பிரதேச எல்லையில் குறித்த மீனவர்கள் மூவரையும் நேற்று (29) கண்டுபிடித்தனர்.

இவர்கள் பயணித்த படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக  கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த்தாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

எம்.எம். அமீர் அலி, எம்.அன்சார், எம்.எஸ்.நாஸர் ஆகிய மீனவர்களே காணாமல் போயிருந்தனர்.

குறித்த மீனவர்களின் வருகையை அடுத்து சாய்ந்தமருது நடுத்துறை ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்களினால்நேற்று  (29) விசேட துஆப் பிரார்த்தனையும் இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இவ் இப்தார் நிகழ்வானது  சாய்ந்தமருது, கடற்கரை வீதி அல்-ஹஸனாத் பள்ளிவாசலின் பின்பாகவுள்ள கடற்கரை திடலில் ஆழ்கடல் மீனவ

இயந்திர படகு சமாஜத்தின் தலைவர் ஏ.ஏ. றஹிம் தலைமையில் இடம்பெற்றது. 

இப்தார் நிகழ்வில் மார்க்க சொற்பொழிவினை தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் பேஸ் இமாம் அப்துல்லா ஜமாலி (ஹிழ்ரி) உரை நிகழ்த்த மௌலவி எம்.எஸ்.எம். சூர்தீன் அவர்களினால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலமையினை போக்கி சுபிட்சமான எதிர்காலத்தை கருத்திற்கொண்டும், மீனவ சமூகத்திற்காகவும்  விசேட துஆப் பிராத்தனையினை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா, ஜம்மிய்யத்துல் உலமா சபைத் தலைவர் எம்.எம்.சலீம்  (சர்க்கி), வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ்.எம். முபாரக், கல்முனை மாநகர சபை  உறுப்பினர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

(யூ.கே.காலித்தீன்)

 

Thu, 05/30/2019 - 12:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை