ஜுன் 3ஆம் திகதி அரசமொழி தினமாக பிரகடனம் செய்ய அரசாங்கம் தீர்மானம்

ஜுன் 3ஆம் திகதியை அரசமொழி தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஒவ்வொரு வருடமும் ஜுன் 3ஆம் திகதி முதல் ஒருவாரகாலத்தை அரச மொழி வாரமாக கொண்டாடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

அனைத்து இன மக்களின் சம உரிமைகளை பாதுகாத்து முரண்பாடுகளை புறந்தள்ளுவதற்கும், பேண்தகு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்கவுமே அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.  

தற்போதைய அரச மொழிக் கொள்கைக்கு அமைய  இலங்கையர்களின் மொழிக் கொள்கையை பாதுகாப்பதற்காக சிங்கள மற்றும் தமிழ் மொழிகள் அரச மற்றும் தேசிய மொழிகளாகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் பயன்படுத்தப்படுகின் றது.இதன் நன்மைகளை மேம்படுத்தும் வகையிலே அரச மொழி தினம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்மூலம் அரச நிறுவனங்களில் சம சேவைக்கான சந்தர்ப்பத்தைப் பலப்படுத்தவும் சகல இன மக்களினதும் சம உரிமைகளை பாதுகாத்து முரண்பாடுகளை புறந்தள்ளி, பேண்தகு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்கக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

இந்த விடயம் தொடர்பில் தேசிய ஒருமைப்பாடு அரச மொழி சமூகக் கொள்கை மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Thu, 05/23/2019 - 09:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை