3 கண் பாம்பு கண்டுபிடிப்பு

வடக்கு அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கண்கள் கொண்ட பாம்பு ஒன்றின் புகைப்படங்களை வன அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர்.

வடக்கு பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை இந்த கண்டுபிடிப்புக் குறித்து விபரம் வெளியிட்டிருப்பதோடு, இந்த விசித்திரமான பாம்பு சமூகதளத்தில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

கார்ப்பட் மலைப்பாம்பு குஞ்சியான இது கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு சில வாரங்களில் உயிரிழந்துள்ளது. இந்த பாம்பின் தலை உச்சியில் இருக்கும் மூன்றாவது கண் இயற்கை பிறழ்வால் ஏற்பட்டது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். 40 சென்டிமீற்றர் நீளம் கொண்ட இந்த பாம்பு அதன் குறைபாடு காரணமாக உணவு உட்கொள்ள சிரமப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Fri, 05/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை